News October 23, 2024

மத்திய போக்குவரத்து துறை அமைச்சருடன் தஞ்சை எம்.பி சந்திப்பு

image

டெல்லியில் இன்று தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்கரியை நேரில் சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான பல்வேறு சாலை திட்டங்கள் மற்றும் திருவையாறு சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெண்ணாற்றின் குறுக்கே தென்பெரம்பூரில் புதிய உயர்மட்ட பாலம் அமைத்திடவும் கோரிக்கை மனுவை அளித்தார். 

Similar News

News December 16, 2025

தஞ்சாவூர்: சாலை விபத்தில் தலைநசுங்கி ஒருவர் பலி

image

தஞ்சாவூர் மாட்டு மேஸ்திரி சந்து பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறி பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கியபோது, அங்கு வந்த மினி பேருந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 16, 2025

தஞ்சை: ஆட்டோ திருட்டு-இருவருக்கு 6 வருடம் சிறை

image

தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் ஆட்டோவை வாடகைக்கு என வர சொல்லி ஆட்டோவை பாதி வழியிலேயே நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி, ஆட்டோவை திருடிச் சென்றதாக ஆட்டோ ஓட்டுனர் சகாயராஜ் என்பவர் கொடுத்த புகாரில், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த மதியழகன், பாலசுந்தர் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வழக்கின் குற்றவாளிகளுக்கு 6 வருட சிறை தண்டனை வழங்கினார்.

error: Content is protected !!