News January 14, 2026

‘மத்திய பட்ஜெட்’ மக்களிடம் கருத்து கேட்கும் அரசு

image

பிப்.1-ம் தேதி 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது. இந்நிலையில், பட்ஜெட் உருவாக்கம் குறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை ஜன.16-ம் தேதிக்குள் வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு MyGov.in-ல் லாகின் செய்து Activities→Union Budget 2026-27→Comment Box-ல் கருத்துகளை பதிவிடுங்கள். இதனால், மக்களின் எதிர்பார்ப்புகளும் பட்ஜெட்டில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது.

Similar News

News January 21, 2026

ராணிப்பேட்டை: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கி வேலை!

image

ராணிப்பேட்டை பட்டதாரிகளே! இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் 1 டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள். SHARE IT!

News January 21, 2026

NDA-வில் இணைந்த தினகரனை வரவேற்ற EPS

image

NDA கூட்டணியில் இணைந்த TTV தினகரனை வரவேற்பதாக EPS தெரிவித்துள்ளார். திமுக கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்த இந்த கூட்டணி இணைந்துள்ளதாக கூறிய அவர், நாம் ஒன்றாக இணைந்து திமுக குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றுவோம் என பதிவிட்டுள்ளார். ஆனால் NDA கூட்டணியில் இணையும்போது TTV தினகரன் EPS பெயரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News January 21, 2026

தேர்தலுக்கு முன்பே காலியான தொகுதிகள்

image

TN-ல் தற்போது 5 சட்டமன்ற தொகுதிகள் தேர்தலுக்கு முன்பாகவே காலியாகி உள்ளன. கட்சி தாவலால், தஞ்சை ஒரத்தநாடு(வைத்திலிங்கம்), தென்காசியின் ஆலங்குளம்(மனோஜ் பாண்டியன்), ஈரோட்டின் கோபி (KAS) தொகுதிகள் காலியாகி உள்ளன. மேலும், அதிமுக வால்பாறை தொகுதி MLA அமுல் கந்தசாமியும், நாமக்கல் சேந்தமங்கலம் தொகுதி திமுக MLA-வாக இருந்த பொன்னுசாமியும் உயிரிழந்ததால் இந்த இரு தொகுதிகளும் காலியாகியுள்ளன.

error: Content is protected !!