News February 1, 2025
மத்திய பட்ஜெட்டிற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் கண்டனம்

நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் இல்லை. குறைந்த பங்களிப்பு செய்யும் மாநிலங்கள் அதிக ஆதாயம் அடைந்துள்ளன என தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
திருச்சுழி அமைச்சரின் தொகுதிக்கு கூட கொண்டு வரவில்லை – பேச்சு

மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், 60 ஆண்டுகால கோரிகையான காவேரி, குண்டாறு திட்டத்திற்காக ரூ.14500 கோடி அறிவித்து எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். அதில் 262 கிமீட்டரில் வெறும் 8 கிமீ மட்டுமே வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசின் தொகுதியில் உள்ள குண்டாறுக்கு கூட அந்த திட்டத்தை கொண்டுவர முடியவில்லை என்றார்.
News March 1, 2026
விருதுநகர்: 23 காலி பணியிடங்களை அறிவித்த ஆட்சியர்

விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்ராப், காரியாபட்டி ஆகிய 11 வட்டாரங்களில் 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. ஆர்வமுள்ள 35 வயதிற்குட்பட்டவர்கள் மார்ச்.6 க்குள் www.virudhunagar.nic.in மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News March 1, 2026
விருதுநகர்: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <


