News February 16, 2025

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

image

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை <>மாத சம்பளம் வழங்கப்படும்<<>>. வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 31, 2025

கிருஷ்ணகிரி: 10Th போதும் Post Office-ல் வேலை

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் மூலம்<<>> விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News December 31, 2025

கிருஷ்ணகிரி: சாலையில் இளைஞர் துடி துடித்து மரணம்!

image

பெரியகுத்தி அருகே நாகமலை கிராமத்தில் வசித்து வரும் முருகன் என்ற இளைஞர் நேற்று (டிச – 30) மாலை 7 மணிக்கு தங்கைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தங்கையை மருத்துவமனையில் விட்டு விட்டு நாகமலைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது சின்னகுத்தி அருகே சாலையில் எதிரே வந்த பிக்கப் வாகனத்தில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

News December 31, 2025

கிருஷ்ணகிரி: முதியவர் தவறி விழுந்து பரிதாப பலி!

image

ஓசூர் மூக்கணடப்பள்ளி அரசனட்டி பாரதி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (60). கூலித் தொழிலாளி. இவர் மத்திகிரி அருகே உள்ளிவீரனப்பள்ளியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் முதலாவது தளத்திலிருந்த அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சரவணன் பரிதாபமாக இறந்தார்.

error: Content is protected !!