News September 12, 2024
மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் பணியாளர் நாள்

விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் செப்டம்பர் 13 காலை 11 மணியளவில், பணியாளர் நாள் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் பணியாளர்கள் கலந்து கொண்டு பணியின் போது ஏற்படும் பல்வேறு குறைகள் குறித்து தெரிவிக்கலாம், எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News August 29, 2025
கணவன் கொலைக்கு நீதிகேட்டு மனு கொடுத்த மனைவி

விழுப்புரம் ஜானகிபுரம் பனந்தோப்பு பகுதியில் கூலிப்படையால் கடந்த 20ஆம் தேதி கொலை செய்யப்பட்ட கருவேப்பிலைபாளையம் பகுதியைச் சேர்ந்த துளசி என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி கொலைசெய்யப்பட்ட துளசி மனைவி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு கொடுத்தனர்.
News August 29, 2025
விழுப்புரம் மாவட்டத்தின் சிறப்புகள் தெரியுமா?

தமிழ்நாட்டின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம், அதன் விவசாய வளத்திற்கும், வரலாற்றுச் சிறப்புக்கும் பெயர் பெற்றது. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்படும் இம்மாவட்டம், விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளது. இங்குள்ள கிழக்கின் ட்ராய் என அழைக்கப்படும் செஞ்சிக் கோட்டை, பார்வையாளர்களின் மனதைக் கவரும். பலவற்றையும் ஒருசேரக் கொண்டுள்ள இம்மாவட்டம், நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்.
News August 29, 2025
விழுப்புரம்: வீட்டில் இருந்தே லைசென்ஸ் பெறலாம்!

விழுப்புரம் மக்களே! இனி வீட்டில் இருந்தபடியே தங்கள் ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகளைச் செய்யலாம். லைசென்ஸ் விண்ணப்பிப்பது, முகவரியைத் திருத்துவது, அலைபேசி எண்ணைச் சேர்ப்பது உள்ளிட்ட பல சேவைகளை ஆன்லைனில் பெறலாம். டூப்ளிகேட் லைசென்ஸ் பெறுவது, லைசென்ஸ் டெஸ்ட் எழுதுவது குறித்த தகவல்களும் இந்த <