News March 15, 2025

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குமரி வருகை

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 31 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐ ஜி எஸ்.ஆர்.சரவணன் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். குஜராத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி 31ஆம் தேதி குமரியில் முடிவடைகிறது இதனை வரவேற்க அமித்ஷா வருகை தர உள்ளார்.

Similar News

News September 13, 2025

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் இன்று நடைபெற்ற சோதனையில் 1.5 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய கார் பைக் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

News September 13, 2025

குமரி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் 13.09.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி – மதியம் 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

News September 12, 2025

கனிம வளங்கள் குறித்த மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

image

இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும் (critical and strategic minerals), 6 வகையான அணுக் கனிமங்களையும் (atomic minerals) அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலேயே மேற்கொள்ளலாம் என்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!