News April 25, 2024
மத்திய அரசு சான்றிதழுடன் தொழில் பயிற்சி

மதுரை புதுார் தொழிற்பேட்டை MSME தொழில்நுட்ப அலுவலகத்தில், வருமான வரி, ஜி.எஸ்.டி, பிராக்டிசனர் பயிற்சி வகுப்புகள் ஏப்.,28 முதல் மே 1 வரை தனித்தனியே 2 நாட்கள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேல் உள்ள இருபாலரும் இதில் கலந்துகொள்ளலாம். விரும்புவோர் 0452 – 2568313 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
மதுரையில் ஓட்டு; வேறு நகரத்தில் வேலை – SIR சமர்ப்பிபது எப்படி?

மதுரை: குடும்பத்தில் ஒரு வாக்காளர் வெளிநாடு, வேறு நகரம், மாநிலத்தில் பணிபுரிந்தாலோ, சம்பந்தப்பட்ட வாக்காளரின் கணக்கெடுப்பு படிவத்தை குடும்பத்தின் வயது வந்த ஒருவரிடம் ஒப்படைக்கலாம். அவர்கள் மேற்குறிப்பிட்ட வாக்காளரின் விவரங்களை கணக்கெடுப்பு படிவத்தில் நிரப்பலாம். வாக்காளரின் சார்பாக கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். SHARE IT.
News November 19, 2025
மதுரையில் உணவுத் திருவிழா; துணை முதல்வர் வருகை

மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த நவ.22 முதல் டிச.3 வரை சரஸ் மேளா எனும் கண்காட்சி நடக்க உள்ளது. உணவுத் திருவிழாவும் நடக்கிறது. இதில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்க உள்ளார். மதுரை, தஞ்சாவூர் பொம்மைகள், கடலோரப் பொருட்கள் உணவு வகைகள் காட்சிப்படுத்தப்படும். *ஷேர்
News November 19, 2025
மதுரை: நாய் குறுக்கிட்டு விபத்து; கணவன், மனைவி பலி

மதுரை சிக்கந்தர் சாவடி அருகே நேற்று அதிகாலை அப்பகுதியை சேர்ந்த கணவன் மனைவி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். காமாட்சி அம்மன் நகர் அருகே சென்ற போது, குறுக்கே நாய் ஒன்று வர, அதன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் குறுக்கே வந்த நாயும் அடிபட்டு இறந்தது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


