News November 22, 2025
மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது: வைகோ

மத்திய அரசு படுமோசமாக தமிழகத்தை வஞ்சிக்கிறதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். கோவையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் அறிக்கையை மட்டும் ரத்து செய்து மத்திய அரசு ஓரவஞ்சமாக செயல்படுவதாக விமர்சித்துள்ளார். மேலும், பாஜக தேர்தலில் எளிதாக வெற்றி பெற இது பிஹார் இல்லை தமிழ்நாடு என்றும் கூறியுள்ளார்.
Similar News
News November 24, 2025
BREAKING: 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

புயல் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புதிதாக திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
PM மோடி நாடு திரும்புகிறார்

தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. அதில் கலந்து கொள்ள சென்ற PM மோடி இன்று நாடு திரும்புகிறார். இது குறித்து அவர் தனது X பதிவில், உச்சிமாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், இதில் பல நாட்டு தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். 2 நாள்கள் நடைபெற்ற <<18364418>>ஜி20 மாநாட்டில்<<>> ஆக்கிரமிப்பு, பொருளாதரம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
News November 24, 2025
NDA கூட்டணியில் புதிய கட்சி.. அறிவித்தார் அண்ணாமலை

வடமாவட்டங்களில் செல்வாக்கை காண்பிக்க, பிரிந்து நிற்கும் பாமகவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக – பாமக இடையே நல்ல நட்பு உள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை, இனி அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்றும் கூட்டணியை சூசகமாக தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் களத்தில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?


