News February 24, 2026

மத்திய அரசுக்கு ₹1,114 கோடி இழப்பு

image

IDFC FIRST வங்கியில் ஹரியானா அரசு சார்ந்த கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றம் மூலம் ₹590 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் 4 வங்கி ஊழியர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர். வங்கியின் பங்குகள் மதிப்பு 20% சரிந்த நிலையில், அதில் 20 கோடி பங்குகள் வைத்துள்ள LIC-க்கு ₹338 கோடியும், மத்திய அரசுக்கு ₹1,114 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக RBI கூறியுள்ளது.

Similar News

News February 26, 2026

AIIMS-ல் 3,000 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க

image

மத்திய அரசின் எய்ம்ஸ் ஹாஸ்பிடல்களில் 3,000 நர்சிங் ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.Sc.Nursing, / Diploma Nursing + இரண்டாண்டு பணி அனுபவம் அவசியமாகும். பிரிலிம்ஸ், மெயின் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் மார்ச் 16-ம் தேதிக்குள் <>aiimsexams.ac.in<<>> தளத்தில் விண்ணப்பிக்கவும். SHARE IT

News February 26, 2026

விபத்து நிவாரணம் பெற புதிய இணையதளம்

image

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியை பெற வசதியாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. <>https://cmarf.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோர் தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். பின்னர், தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, நீங்கள் அளித்த வங்கிக் கணக்கிற்கே நிதியுதவி வந்தடையும். மேலும், இதுதொடர்பான விவரங்களை TN அரசு விரைவில் வெளியிடவுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News February 26, 2026

தவெக தலைமை மீது நிர்வாகிகள் அதிருப்தி?

image

தவெக சார்பாக தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனுவை சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், நேர்காணல் நடத்தாமலேயே 80 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிப்.28-ல் வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளாராம். மா.செ.,க்களிடம் ஆலோசனை நடத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாம். இதனால், சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்பமனு அளித்த நிர்வாகிகள், தலைமை மீது அதிருப்தியில் இருக்கின்றனராம்.

error: Content is protected !!