News October 18, 2024
மத்திய அரசின் திறன் மேம்பாடு பயிற்சி

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் பிரதமர் PMKVY4.0 முன்னோடி பயிற்சி திட்டத்தின் கீழ் உற்பத்தி மேற்பார்வையாளர் 720 மணி நேரம் திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு பயிற்சி மையம் முதல்வர் 04342 266601, 9940830290 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
தருமபுரி மாவட்டத்தில் பேச்சுப் போட்டிகள் தேதி அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர்,முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளுக்கான பேச்சுப் போட்டிகள் முறையே 16,17 தேதி ஆகிய நாள்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 வரை மட்டும் கலந்து கொள்ளலாம்.
News July 8, 2025
நொரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதியான எர்ரணஅள்ளி மேம்பாலம் அருகே காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஏரியில் இருந்து சட்டவிரோதமாக நொரம்பு மண் கடத்தி வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். காவலர்களைக் கண்டதும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
News July 8, 2025
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம்

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வருகிற 09.07.2025 அன்று காலை 10 மணி அளவில் நல்லம்பள்ளி வட்டம், இண்டுர் உள்வட்டம். சோமனஅள்ளி கிராமத்தில் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறை குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டு செயல்படுத்தும் நோக்கில் முகாம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.