News October 19, 2024

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் சகோதரர் கைது

image

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை, பெங்களூரு போலீசார் கைது செய்தனர். MP தேர்தலில் சீட் தருவதாக ₹2 கோடி வாங்கி ஏமாற்றியதாக கோபால் மீது JDS Ex MLA மனைவி ஒருவர் புகார் அளித்திருந்தார். அவர் மீது மோசடி, SC/ST சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மகாராஷ்டிராவில் வைத்து இன்று கைது செய்தனர். இதனிடையே சகோதரருடன் 30 ஆண்டுகளாக தொடர்பு இல்லை என பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.

Similar News

News August 9, 2025

திருமாவளவன் காணாமல் போவார்: EPS

image

<<17349030>>MGR-ஐ<<>> விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி, அதிமுக எனவும் தெரிவித்தார். NDA கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்று ஓபிஎஸ்தான் சொல்ல வேண்டும் எனக் கூறிய அவர், 8 மாதங்களில் சிறப்பான கூட்டணி அமைத்து, 2026-ல் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

TN மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

image

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்ததோடு, படகு, வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அண்மையில் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருவதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

News August 9, 2025

30 ஆண்டுகளாக PM மோடிக்கு ராக்கி கட்டும் PAK பெண்!

image

PM மோடிக்கும் PAK பெண் ஒருவருக்கு இருக்கும் சகோதரத்துவ பந்தம் வியப்பில் ஆழ்த்துகிறது. பாகிஸ்தானில் பிறந்த கமர் மொஹ்சின் ஷேக், இந்தியர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு அகமதாபாத்தில் செட்டிலாகினார். 90-களில் மோடியை(அப்போது அவர் CM கூட இல்லை) முதன்முதலில் சந்தித்து ராக்கி கட்டிய கமர், அப்பழக்கத்தை 30 ஆண்டுகளாக தொடர்கிறார். ராக்கியை அவர் வாங்குவதில்லை, அவரே ஸ்பெஷலாக தனது கையால் தயாரிக்கிறார்.

error: Content is protected !!