News January 12, 2025

மத்திய அமைச்சர் சொல்வது தவறு: அமைச்சர் கீதா ஜீவன்

image

தூத்துக்குடியை சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு கூறியதாக மத்தியமைச்சர் தெரிவித்துள்ளார். வழக்கம்போல் மத்திய அரசு பொய்யான தகவலை தெரிவித்து வருகிறது. இது முற்றிலும் தவறு. இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 29, 2025

தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் பட்டியல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (28-08-2025) இரவு ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் பட்டியல் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஸ் இரவு ரோந்து அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் போலீசாரின் விவரங்களும், தொடர்பு எண்களும் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.

News August 28, 2025

BREAKING: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அதிரடி மாற்றம்

image

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த பானோத் ம்ருகேந்தர் லால் இன்று (ஆகஸ்ட்.28) அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய ஆணையராக எஸ்.பிரியங்கா ஐஏஎஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News August 28, 2025

வீட்டு வசதி வாரிய பயனாளிகளுக்கு நல்ல செய்தி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீட்டு வசதி பிரிவு உட்பட்ட திட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்த தவறிய தகுதியான ஒதுக்கீடு தருவதற்கு வட்டி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த சலுகை வரும் 2026 மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!