News August 29, 2025
மத்திய அமைச்சரை வரவேற்ற பாஜக தலைவர்

சென்னை விமான நிலையத்தில் இன்று (ஆக.29) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
அப்போது தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இருந்தார். இந்நிகழ்வில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.
Similar News
News August 29, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஆக.29) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
News August 29, 2025
ஸ்தம்பித்த பெசன்ட் நகர்

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் பொன்விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், வரும் செப்.8-ம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று மாலை அப்பகுதியில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
News August 29, 2025
சென்னை: ஆட்டோ வேண்டுமா? APPLY NOW

▶️சென்னையில் வசிக்கும் பெண்களுக்கு 3-ம் கட்டமாக இளஞ்சிவப்பு ஆட்டோ பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️ 20 முதல் 45 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ▶️ ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ▶️ விண்ணப்பிக்க சிங்காரவேலர் மாளிகை, 8-ஆவது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் அனுகவும். ▶️கடைசி நாள் செப்.15-ஆகும். (SHARE பண்ணுங்க)