News November 27, 2024
மத்திய அமைச்சரை சந்தித்த நாமக்கல் எம்.பி

டெல்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நேரில் சந்தித்தார். அப்போது, துறந்தோ ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தும் கலந்துரையாடினார்.
Similar News
News November 12, 2025
நாமக்கல்: கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி!

நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும், வரும் நவ.17ம் தேதி காலை 11 மணிக்கு நாமக்கல் – மோகனூர் சாலை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.
News November 12, 2025
எம்.பி ராஜேஷ்குமார் நாளை கலந்து கொள்ளும் நிகழ்வு!

மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஷ் குமார் நாளை (நவ.13) காலை நாமக்கல் மாநகராட்சியில் தோழி விடுதி அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு மற்றும் பழையபாளையம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்வு மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.
News November 12, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.12) நாமக்கல்-(தங்கராஜ் – 9498170895) ,வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


