News March 26, 2025
மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த மயிலாடுதுறை எம்பி

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை இன்று நேரில் சந்தித்து மயிலாடுதுறை தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார். திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக தாம்பரம் வரையிலான இன்டர்சிட்டி ரயிலை வாரத்தில் எல்லா நாளும் இயக்க வேண்டும், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
Similar News
News December 3, 2025
மயிலாடுதுறை: நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சம்பா விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சியில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News December 3, 2025
மயிலாடுதுறை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News December 3, 2025
மயிலாடுதுறையில் பெய்த மழை நிலவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 17.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 7.20 மி.மீ, மணல்மேட்டில் 8 மி.மீ, சீர்காழியில் 16.40 மி.மீ, தரங்கம்பாடியில் 12.30 மி.மீ, செம்பனார்கோயில் 9 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


