News November 23, 2025
மது, Fast Food-க்கு தடை, மீறினால் ₹1 லட்சம் அபராதம்

திருமணம் போன்ற நிகழ்வுகளில் மது, Fast Food உள்ளிட்டவை சர்வசாதாரணமாக மாறிவிட்டது. இந்நிலையில், உத்தராகண்டின் ஜான்சர்-பவர் பழங்குடி பகுதியிலுள்ள 25 கிராமங்களில், மது, Fast Food-க்கு தடை விதித்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி திருமணம் போன்ற நிகழ்வுகளில் மது, பீட்சா, பாஸ்தா, மோமோஸ் போன்ற Fast Food-ஐ விருந்தினர்களுக்கு வழங்கினால் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படுமாம்.
Similar News
News February 20, 2026
அமைச்சர் பதவியிலிருந்து நேருவை தூக்குங்க: விஜய்

அமைச்சர் பதவியில் இருந்து கே.என்.நேருவை நீக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். நகராட்சி துறையில் நடைபெற்றுள்ள ₹1,020 கோடி ஊழல் தொடர்பான ஆதாரங்களை ஐகோர்ட் உறுதிசெய்தும், நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு இது பெரும் அவமானம் என சாடியுள்ளார். மேலும், ஊழல் மலிந்த இந்த அரசை 2026 தேர்தலில் மக்கள் தூக்கியெறிய தயாராகிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.
News February 20, 2026
உங்களுக்கு PM KISAN பணம் வருமா?.. செக் பண்ணுங்க!

PM KISAN திட்டத்தின் 22-வது தவணையை (₹2,000) அடுத்த வாரம் (அ) மார்ச் முதல் வாரத்தில் மத்திய அரசு விடுவிக்கும் என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக, யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்பதை ஆன்லைனில் அறியலாம். pmkisan.gov.in இணையதளம் சென்று, Beneficiary List ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதன்பின், விவரங்களை உள்ளிட்டு Get Report பட்டனை கிளிக் செய்தால் பயனாளிகளின் பட்டியல் வெளியாகும். SHARE
News February 20, 2026
முட்டை விலை சரசரவென சரிந்தது

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாள்களாக முட்டை கொள்முதல் விலை ₹5.40 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை கொள்முதல் விலை ₹5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டை விலை சரிந்துள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். உங்க ஊரில் முட்டை விலை என்ன?


