News December 31, 2025

மதுவை தொடமாட்டேன்: New year சபதம் எடுத்துட்டீங்களா?

image

புத்தாண்டு பிறந்தாலே குடிமகன்கள் பலரும் இனி சரக்கை ஒருபோதும் தொடவே மாட்டேன் என ஒவ்வொரு ஆண்டும் அதிரடி சபதம் எடுப்பார்கள். ஆனால் அப்படி திடீரென்று மதுவை நிறுத்துவது அதிக மது அருந்துபவர்களின் உடல்நலனை பாதிக்கும் என்கிறார் அமெரிக்க உடல்நல நிபுணர் ட்ரான்சோ. மேலும், மதுவை ஒரேடியாக நிறுத்துவதற்கு பதில், Sober curious மனநிலையுடன் வாரத்திற்கு 1,2 பாட்டில்களை குறைப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News February 7, 2026

ஒரேநாளில் தலைகீழாக மாறிய வெள்ளி விலை

image

தங்கத்தை போன்றே வெள்ளி விலையும் இன்று (பிப்.7) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹285-க்கும் 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 2 நாள்களில் கிலோவுக்கு ₹40,000 குறைந்த வெள்ளி விலை இன்று அப்படியே தலைகீழாக அதிகரித்துள்ளது. இது நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News February 7, 2026

‘₹’ குறியீடு எப்படி உருவானது தெரியுமா?

image

ரூபாயின் குறியீடு எப்படி உருவானது என தெரியுமா? தேவநாகரி எழுத்து “र” (ra) மற்றும் நேர்கோடு இல்லாத லத்தீன் எழுத்து ‘R’ ஆகியவற்றின் கலவை இது. தேவநாகரி என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகளை எழுதப் பயன்படுத்தப்படும் எழுத்து முறை. இந்த குறியீடு ஜூலை 15, 2010-ல் இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை திருச்சியை சேர்ந்த உதய குமார் என்பவர் வடிவமைத்தார். SHARE.

News February 7, 2026

பார்லி.,யில் பாஜகவினர் கத்திட்டே இருக்காங்க: TR பாலு

image

நாடாளுமன்றம் நடக்கிறது என சொன்னாலே சிரிப்பாக வருகிறது என MP டி.ஆர்.பாலு கூறியுள்ளார். நாடாளுமன்றம் முறையாக நடப்பதில்லை என்ற அவர், ஒரு கருத்தை முன்வைக்க எழும்போதே, பாஜகவினர் கத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தியாவின் 140 கோடி பேருக்கும் தலைகுனிவு என மக்கள் நினைப்பதாகவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!