News December 12, 2025
மதுரை : SIR-ல பெயர் இருக்கா இல்லையா? CHECK பண்ணுங்க!

மதுரை மக்களே, நீங்க கொடுத்த எஸ்ஐஆர் படிவத்தில் 2026 வோட்டர் லிஸ்ட்-ல் உங்க பெயர் சேர்த்தாச்சா இல்லையா? என்பதை உங்க போன்-லே பார்க்கலாம்.
1.இங்கு <
2. FILL ENUMERATION -ஐ தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவு செய்ங்க.
மேலே உள்ள புகைப்படம் போல் வந்தது என்றால் உங்க பெயர் சமர்பிக்கபட்டது. இல்லையேன்றால் உங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ளுங்க.SHARE பண்ணுங்க.
Similar News
News December 14, 2025
மதுரை: குடும்பத் தகராறில் முதியவர் தற்கொலை.!

பேரையூர் அருகே கே.ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பாட்டையா(60). மது போதைக்கு அடிமையான இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் தகராறு இருந்த வந்தது. இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்து வசித்து வந்த இவர், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 14, 2025
மதுரையில் போக்குவரத்து மாற்றம்.!

மதுரை, கோரிப்பாளையம் மேம்பால திட்டத்திற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி எம்.எம் லாட்ஜ் பகுதியிலிருந்து பனகல் சாலை செல்லும் வாகனங்கள், கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து சற்று வலதுபுறம் திரும்பி, தேவர் சிலையை சுற்றி இடது பக்கம் திரும்பி பனகல் சாலைக்கு செல்ல வேண்டுமென மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ வரைபடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
News December 14, 2025
மதுரை பல்நோக்கு மருத்துவ முகாமை ஆய்வு செய்த ஆணையர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மதுரை மாநகராட்சி சார்பில் மருத்துவக் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் இன்று (13.12. 2025) நேரில் பதிவு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி நகர்நல அலுவலர் அபிஷேக் உள்ளார்.


