News July 5, 2024
மதுரை: 53 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

மக்களவைத் தேர்தலின்போது மதுரை மாவட்டத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் பணிமாற்றம் செய்யப்பட்ட 53 காவல் ஆய்வாளர்களை மீண்டும் தாங்கள் தேர்தலுக்கு முன் பணியாற்றிய காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி நேற்று(ஜூலை 4) உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News July 10, 2025
குமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் வழித்தட மாற்றம்

மதுரை கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, ஜூலை 11 அன்று காலை 05:15 மணிக்கு புறப்படும் குமரி-ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229) மதுரை, கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல்லில் நிற்காமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை சந்திப்பு, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.
News July 10, 2025
குமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்

ஜூலை.12 அன்று காலை 05:50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி-ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் எண் (12666) மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக மதுரை மற்றும் திண்டுக்கல்லை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக திருப்பி விடப்படும். மாற்று நிறுத்தங்கள் அருப்புக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகியவை அடங்கும்.
News July 10, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (09.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.