News September 14, 2025

மதுரை: 5 பேருக்கு மறுவாழ்வு தந்த சிறுவன்

image

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள், ஐந்து பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. மகனது உடல் உறுப்புகளை தானமாக தர ராஜேந்திரன் சம்மதித்தார். கல்லீரல், ஒரு சிறுநீரகம், திருச்சி காவேரி மருத்துவமனைக்கும்; மற்றொரு சிறுநீரகம், மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும்;இரண்டு கருவிழிகள், மதுரை அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. சிறுவனின் உடலுக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Similar News

News September 14, 2025

மதுரை: கண்டிப்பாக நீங்க தெரிந்திருக்க வேண்டியவை

image

▶️மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
▶️போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
▶️மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
▶️மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும். (அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்)

News September 14, 2025

தல்லாகுளம் பெருமாள் கோவில் கொடியேற்றம் தேதி அறிவிப்பு

image

மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்னா வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவ திருவிழா செப். 24ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று காலை 10:15 க்கு ரதத்திற்கு முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. அக். 2ம் தேதி தேரோட்டமும் அக். 4ஆம் தேதி தெப்ப உற்சவம் அக். 6ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 14, 2025

மதுரை: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

image

மதுரை மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மதுரை மாவட்ட மக்கள் 94431-11912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!