News August 15, 2025

மதுரை: 20 ரூபாய்க்காக பள்ளி மாணவி தற்கொலை..!

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளியில் (ஆகஸ்ட் 15) இன்று கொடியேற்ற நிகழ்வுக்கு செல்ல 20 ரூபாய்க்கு கேட்ட மாணவிக்கு தாய் பணம் தர மறுத்ததால், மாணவி ராஜராஜேஸ்வரி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 20 ரூபாய்க்காக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செக்கானூரணி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 16, 2025

மதுரை மக்களே இதை பயன்படுத்திக்கோங்க

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.செப்.28 ல் குரூப் 2 பணியிடங்கள் உட்பட 645 காலியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் நேரிலோ அல்லது 96989-36868 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். பணம் கொடுத்து சேருவதற்கு பதில் அரசின் இலவச வகுப்பில் சேர்ந்து பயனடைங்க மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

காவல்துறை பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு.

image

மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடவுச்சொல் பாதுகாப்பு
தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்குங்கள். இரண்டு அடுக்கு பாதுகாப்பினை பயன்படுத்தவும். கடவுச்சொற்களை யாருடனும், ஒருபோதும் பகிர வேண்டாம். கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றவும். தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்த வேண்டாம். குறைந்தது 8 எழுத்துகள் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

News August 15, 2025

மதுரையில் கணவரால் பிரச்சனையா.? உடனே கூப்பிடுங்க.!

image

மதுரையில், நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 0452 – 2580259 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!