News January 9, 2026
மதுரை: 11ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்; ஒருவர் கைது

மதுரை, பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(26). இவர் +1 படிக்கும் மாணவியை கோச்சடையில் உள்ள கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த திருப்பரங்குன்றம் மகளிர் நல அலுவலர் பத்மா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.
Similar News
News February 5, 2026
மதுரை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

மதுரை மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இங்கு <
News February 5, 2026
BREAKING மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிப்.28 இல் திறப்பா?

மதுரையில் பிப்.28 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்ட கட்டிட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட கட்டிடங்களை பிரதமர் மோடி பிப்.28 அன்று திறக்கவுள்ளதாக தகவல். இது தென்மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News February 5, 2026
BREAKING மதுரைக்கு வரும் பிரதமர் மோடி?

மதுரையில் பிப்.28 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெறுங்கும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


