News October 22, 2025

மதுரை வைகை ஆற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

image

மதுரை ஓபுளா படித்துறை அருகேயுள்ள வைகையாற்றுக்குள் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற தெப்பக்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இதுகுறித்து மதுரை மாநகராட்சி தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் முருகன் அளித்தப் புகாரின் பேரில், இறந்த நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 11, 2026

மதுரை: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

image

மதுரை மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

கோரிப்பாளையம்: அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி

image

மதுரை, பனகல் சாலை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் கடந்த வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றபோது, அரசுப் பேருந்து மோதியது. பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். 55 வயது மதிக்கத்தக்க இவர், வலது கால் முட்டி மற்றும் வலது முன்னங்கையில் பழைய காயத் தழும்புகளுடன், சிவப்பு நிற அரைக்கால் ஆடை அணிந்திருந்தார். இது தொடர்பாக மதுரை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News February 11, 2026

மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (10.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.

error: Content is protected !!