News January 28, 2026

மதுரை வேளாண் கல்லூரியில் விதைகள் விற்பனைக்கு தயார்

image

மதுரை வேளாண் கல்லூரி வேளாண் அறிவியல் நிலையத்தில், விதைச்சான்று துறையால் அங்கீகரிக்கப்பட்ட வம்பன் 8.11 ரக உளுந்து விதைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மொத்தம் 33 டன் தரமான வீரியம் கொண்ட விதைகள் கையிருப்பில் உள்ளன. விவசாயிகள் நிலையத்திற்கு நேரில் சென்று ஒரு கிலோ ரூ.110-க்கு வாங்கி பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 94420-54780 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News January 29, 2026

மதுரை : இனி Gpay, Phonepe, paytm -க்கு குட்பை!

image

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க

News January 29, 2026

வயிற்று வலி தாங்காமல் போட்டோகிராபர் தற்கொலை

image

திருமங்கலம் பாண்டி மகன் அசோக்குமார்(21). இவர் கேஎம் பிளக்ஸ் ஷாப்பில் போட்டோகிராபராக வேலை பார்த்தார். இவருக்கு வயிற்று வலி இருந்துள்ளது. நேற்று தாய் முத்துலட்சுமியிடம் வயிற்று வலிப்பதாக கூறி மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி வர சொல்லி அனுப்பி உள்ளார். அவர் வெளியில் சென்று திரும்பிய போது வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 29, 2026

மதுரை: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

image

மதுரை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!