News May 28, 2024
மதுரை: விபத்தில் காதலர்கள் பலியான பரிதாபம்

மதுரை, ஆண்டார்கொட்டாரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(29). இவர் சென்னையை சேர்ந்த பவித்ரா(24) என்பவரை காதலித்து வந்த நிலையில், விரைவில் திருமணம் செய்ய இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும்(மே 26) சிவகங்கையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு பைக்கில் வந்தபோது உறங்கான்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்தியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 6, 2026
BREAKING மதுரை: 9 போலீசாருக்கு இரட்டை மரண தண்டனை

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
News April 6, 2026
மதுரை: தண்டனை விவரத்தை வாசிக்க தொடங்கிய நீதிபதி

சாத்தான்குளத்தை சேர்ந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செட்டப்பட்ட SI, இன்ஸ்பெக்தர் உள்ளிட்ட 9 போலீசார் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு. தந்தையும், மகனையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்து இரவு முழுவதும் கொடூரமாக தாக்கியுள்ளனர். தந்தையையும், மகனையும் இரக்கமின்றி அடித்ததை கொடூரமகவே பார்க்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
News April 6, 2026
மதுரை: அமைச்சர் பி.மூர்த்திக்கு ரூ.13.58 கோடி சொத்து

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.மூர்த்திக்கு ரூ.10.81 கோடி அசையா சொத்துகளும், ரூ.2.77 கோடி அசையும் சொத்துகளும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் மூர்த்தியின் மனைவி செல்லம்மாள் பெயரில் ரூ.1.35 கோடி சொத்துகள் உள்ளன.


