News March 30, 2025
மதுரை: வாரச்சந்தை ஏலம் அறிவிப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சிக்குட்பட்ட செக்கானூரணி கிராமத்தில் வாரச்சந்தை 2025-26-ம் ஆண்டிற்கான ஏலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் மூடி முத்திரையிடப்பட்ட விண்ணப்பங்களை 03.04.2025-ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணி வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News April 1, 2025
மதுரையில் வேலை வாய்ப்பு

மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் PGT, TGT, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட 06 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு
B.Ed, BA, M.Com, M.Sc, MA, MBA படித்த 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் <
மாதம் ரூ.21250 -27,500 வரை ஊதியம் கிடைக்கும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News April 1, 2025
மதுரையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 1, 2025
உசிலம்பட்டி கிணற்றிலிருந்து ரூ.13 கோடி தங்க நகை மீட்பு

கர்நாடகாவில் 2024ம் ஆண்டு SBI வங்கியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 17.7 கிலோ தங்க நகைகள் மர்மநபர்களால் திருடப்பட்டது.இச்சம்பவத்தில் 6 மாதங்களாக துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த அண்ணன், தம்பி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் திருடிய ரூ.13 கோடி மதி்ப்புள்ள தங்க நகைகள் உசிலம்பட்டியில் உள்ள 30 அடி ஆழகிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.