News January 26, 2026

மதுரை வடக்கில் DMK-க்கு பதில் காங்., போட்டியிட வேண்டும்

image

திமுக இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது என மதுரை வடக்கு தொகுதி MLA தளபதி கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக, 2026-ல் மதுரை வடக்கு தொகுதியில் காங்., போட்டியிட கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன் என்று X-ல் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 8, 2026

பெண்கள் அதிகம் விரும்பும் 9 சேலைகள்!

image

சேலை வெறுமனே உடை மட்டும் அல்ல; அது, இந்திய பாரம்பரியத்தின் சின்னம். ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்துவமான நெசவுத்திறன், டிசைன்களில் சேலைகள் உருவாக்கப்படுகின்றன. அவை அந்த மண்ணின் பண்பாட்டை, கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. இந்திய பாரம்பரியத்திற்கு அழகு சேர்க்கும் சேலை வகைகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. உங்களுக்கு பிடித்த சேலை எது?

News February 8, 2026

BREAKING: விஜய் பரப்புரைக்கு அனுமதி

image

இந்த ஆண்டில் முதல் நிகழ்வாக, சேலம் சீலநாயக்கன்பட்டியில் தவெக மக்கள் சந்திப்பை நடத்த விஜய்க்கு அனுமதி கிடைத்துள்ளது. பிப்.13, மதியம் 12 – 3 மணிக்குள் கூட்டத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5,000 பேர் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், அது ஏற்கப்பட்டுள்ளது. டிராபிக் ஜாம் இல்லாமல் நடத்த வேண்டும், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

News February 8, 2026

காங்கிரஸுக்கு செக் வைக்கும் திமுக ரிப்போர்ட்

image

காங்., 41 சீட்களை கேட்பதாக தகவல் வெளியான நிலையில், 1 MP-க்கு 3 MLA சீட்கள் வீதம் 27 சீட்கள் கொடுக்க திமுக முன்வந்துள்ளதாம். இந்த எண்ணிக்கையை தாண்டி பேச்சுவார்த்தை சென்றால், தனது சர்வே ரிப்போர்ட்டை காண்பிக்கவும் திமுக தயாராகவுள்ளதாம். அந்த ரிப்போர்ட்டில் 12 காங்., MLA-க்களின் செயல்பாடு சரியாக இல்லை என்றும், அவர்கள் மீண்டும் களமிறங்கினால் NDA கூட்டணியே வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

error: Content is protected !!