News November 7, 2025
மதுரை: ரேஷன் அட்டையில் குறைகளை தீர்க்க நாளை முகாம்

மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம், நவம்பர் 8-ஆம் தேதி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலங்களில் நடைபெறும் இந்த முகாமில், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பிற குறைகள் தொடர்பான மனுக்களை மக்கள் அளித்து தீர்வு பெறலாம்.
Similar News
News February 11, 2026
மதுரை: பெற்றோர்களின் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 11, 2026
மதுரை: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

மதுரை மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
கோரிப்பாளையம்: அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி

மதுரை, பனகல் சாலை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் கடந்த வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றபோது, அரசுப் பேருந்து மோதியது. பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். 55 வயது மதிக்கத்தக்க இவர், வலது கால் முட்டி மற்றும் வலது முன்னங்கையில் பழைய காயத் தழும்புகளுடன், சிவப்பு நிற அரைக்கால் ஆடை அணிந்திருந்தார். இது தொடர்பாக மதுரை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


