News November 25, 2025
மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

திருமங்கலம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்கம் போல்
வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறியவர் திருமங்கலம் ரயில் நிலையம் சென்று, நாகர்கோவிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
Similar News
News November 26, 2025
மதுரை: கொலையில் சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பாலமுருகன் 40.பெற்றோர் இறந்த நிலையில் பராமரிப்பின்றி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். நவ.17 காலை ஊர் மயானத்தில் காயங்களுடன் கிடந்தார். போலீசார் விசாரித்ததில் அப்பகுதி கட்டட தொழிலாளர்கள் மாயமானது தெரிந்தது. தொடர் விசாரணையில் யூனியன் ஆபீஸ் காலனி கேசவன் 23, பொட்டுலுபட்டி சேதுபதி பாஸ்கர் 23 மற்றும் 17 வயது 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
News November 26, 2025
மதுரை: 8ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – வாலிபர் கைது

மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் ஆகாஷ்குமார்(26). இவர் 8ம் வகுப்பு மாணவி என்று தெரிந்தும் சட்ட விரோதமாக திருமணம் செய்தார். இதனால் அவர் 6 மாத கர்ப்பமானார். இந்த தகவல் மகளிர் ஊர்நல அலுவலர் பத்மாவுக்கு தெரிய வர, தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ஆகாஷ் குமாரை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்து விசாரணை.