News October 24, 2024

மதுரை: மேயர் தலைமையில் இன்று மாமன்ற கூட்டம்

image

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் மாதாந்திர மாமன்ற கூட்டம் அண்ணா அறிஞர் மாளிகையில் நடைபெறுவது வழக்கம் இன்று(அக்.24) இந்த மாதத்திற்கான மாமன்ற கூட்டம் நாளை காலை 10 மணிக்கு மேல் நடைபெறும் என மேயர் இந்திராணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்மேலும் நூறு மாமன்ற உறுப்பினர்களும் கூட்டத்திற்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Similar News

News February 8, 2026

மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் எண்கள்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (08.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக போலீசுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெறலாம்.

News February 8, 2026

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு குறித்த தகவல்!

image

மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டாலும், கட்டுமானப் பணிகள் 2024 – மே மாதமே தொடங்கின. ரூ.2,021 கோடியில் 29 கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. மார்ச் 1ல் திறப்பு என தகவல் பரவினாலும், தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. ஜூன் மாதம் புறநோயாளிகள் பிரிவு செயல்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

News February 8, 2026

சோழவந்தானில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சா ?

image

சோழவந்தான் சங்கங்கோட்டை முத்தையா என்பவர் வீட்டில் இன்று (பிப்.8) அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. வீட்டின் மதில் சுவரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அடையாளங்கள், ஜன்னல் வழியாக உள்பக்க கதவு பகுதியில் லேசான சேதம் இருந்தது. சோழவந்தான் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

error: Content is protected !!