News October 10, 2025

மதுரை மேயரின் கணவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது

image

சொத்து வரி விதிப்பு முறைகேடு புகாரில் சிக்கி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், ஆக.12ல் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை ஏற்கனவே மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை. ஜாமின் அனுமதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

Similar News

News December 10, 2025

மதுரையில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452-2535067
2.உயர்நீதிமன்றம் மதுரை கிளை: 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 10, 2025

மதுரை: அரசு பஸ்சில் பெண்ணிடம் ரூ.5 லட்சம் அபேஸ்.!

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி ஹேமலதா(24). இவர் தனது நகையை கனரா வங்கியில் அடகு வைத்து ரூ. 8.20 லட்சத்துடன் மதுரை கல்லுப்பட்டியை நோக்கி அரசு பஸ்ஸில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். கொட்டாம்பட்டி அருகே பஸ் வந்த போது அவர் வைத்திருந்த பணத்தில் ரூ.5 லட்சம் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 10, 2025

மதுரை: பஸ் மீது டூவீலர் மோதி இளைஞர் பலி.!

image

உசிலம்பட்டி வகூரணியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் முருகன்(40). இவர் நேற்று முன்தினம் உசிலம்பட்டி அரசு பணிமனை எதிரே டவுன் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) டூவீலரில் அதி வேகமாக வந்து பஸ்ஸின் பின்னால் மோதினார். இதில் பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!