News December 14, 2025

மதுரை: மூதாட்டியிடம் செயின் பறிப்பு; CCTV யில் சிக்கிய மூவர்

image

மதுரை மாவட்டம், தனிச்­சி­யத்தை சேர்ந்­த­ செல்­லம்­மாள்(80), 2 நாட்க­ளுக்கு முன் இரவு வீட்டின் முன்­பு இருந்­தபோது 2 பேர், அவர் கழுத்­தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறிக்க முயல, செயின் அறுந்தது. அதில் 3 பவுன் செயினை அறுத்­து கொண்டு தப்­பினர். சிசி­டிவி பதிவுகளை ஆய்வு செய்து சந்­தோஷ் பர­மன்(23) ,கருப்­பு­சாமி(23), தென்­னரசு(23) ஆகிய 3 பேரை கைது செய்து 3 பவுனை வாடிப்பட்டி போலீசார் இன்று மீட்டனர்.

Similar News

News December 18, 2025

மதுரை: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

மதுரை மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News December 18, 2025

மதுரை: கையும் களவுமாக சிக்கிய போலி அரசு அதிகாரி

image

மதுரை தெற்கு மாசிவீதி மறவர்சாவடி தெரு மக்களிடம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி ஒரு பெண் மின்வாரிய எண்கள் குறித்த ஸ்டிக்கர் வீடுகளில் ஒட்ட வேண்டும் என கூறினார், சில பெண்கள் அவரிடம் பணம் கொடுத்தனர். விக்னேஸ்வரன் என்பவர் சந்தேகப்பட்டு விசாரித்ததில் அப்பெண் போலி மின் அலுவலர் என தெரிந்தது அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் விசாரித்ததில் வாடிப்பட்டி கச்சகட்டி சங்கீதா 42 எனத் தெரிந்தது.

News December 18, 2025

மதுரைக்கு சிறப்பு ரயில்.. இன்று முக்கிய அப்டேட்!

image

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை – தாம்பரம் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நெல்லை – சென்னை தாம்பரம் சிறப்பு ரயில் (06166) நெல்லையில் இருந்து டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4ம் தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்றடையும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது.

error: Content is protected !!