News November 15, 2024

மதுரை முல்லை நகர் விவகாரம் – சீமான் அறிக்கை

image

மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 575 குடும்பங்களின் குடியிருப்புகளைக் கண்மாய் இருந்த பகுதி என்று கூறி மக்களை வெளியேற்றி வீடுகளை இடிக்க தமிழ்நாடு அரசு அறிக்கை அனுப்பியிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 19, 2024

மதுரையில் முதல் முறையாக இதய வடிவிலான ரெட் சிக்னல்

image

மதுரை, மாட்டுத்தாவணி மேலூர் மெயின் சாலையில் இதய வடிவிலான ரெட் சிக்னல் வாகன ஒட்டிகளை கவர்ந்து வருகிறது. சென்னையில் இதய சிக்னல் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. அதேபோல் மதுரையில் உத்தங்குடி ரிங் ரோடு சந்திப்பு சர்வேயர் காலனி 120 அடி ரோடு மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் சந்திப்பு சிக்னல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நேற்று(நவ.18) போக்குவரத்து துணை கமிஷனர் அனிதா உதவி கமிஷனர் இனமாறன் ஆய்வு செய்தனர்.

News November 19, 2024

மதுரை சிறுவனுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க ஆட்சியர் உத்தரவு

image

மதுரை மாநகராட்சி பள்ளியின் மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த மாணவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று(நவ.18)  கலெக்டர் சங்கீதா சிறுவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், பின்னர் சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டீன் அருள் சுந்தரேஷ்குமாரிடம் கேட்டறிந்தார். மேலும் சிறுவனுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்

News November 19, 2024

மதுரை சிறைக்கு 89 ஏக்கரில் செம்பூரில் இடம் தேர்வு

image

மதுரை மத்திய சிறை 1875ஆம் ஆண்டு, 31 ஏக்கரில் அமைக்கப்பட்டது. இட நெருக்கடியான இச்சிறையில் தற்போது 1800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை புறநகர் பகுதியில் புதிதாக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மேலுார் அருகே செம்பூரில் 89 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.