News September 26, 2025

மதுரை மீனாட்சியாக மாறிய ஆதி மாரியம்மன்

image

திருச்சி, இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 5-ம் நாளான இன்று அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆதி மாரியம்மன் மதுரை மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து அம்மனுக்கு கும்ப தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Similar News

News January 4, 2026

திருச்சி: பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக வரும் 13, 20 ஆகிய தேதிகளில் தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து திருச்சி வழியாக வரும் 14, 21 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 4, 2026

திருச்சி மாநகரில் தடை: கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இன்று மற்றும் நாளை (ஜன.4, 5) ஆகிய இரு தினம், திருச்சி மாநகர பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடியை மீறி ட்ரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!