News October 21, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (21.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
மதுரை கார் மோதியதில் பைக்கில் சென்றவர் பலி

மதுரை, பேரையூர் சேடப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி(48). இவர் தனது டூவீலரில் பேரையூர் உசிலம்பட்டி சாலையில் நேற்று முன்தினம் சென்ற போது அமிர்தம் பார்ம் அவுஸ் அருகே, முன்னாள் வந்த கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். சேடப்பட்டி போலீசார் பேரையூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுவாமிநாதன்(58) என்பவரை கைது செய்து இன்று விசாரிக்கின்றனர்.
News January 27, 2026
மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சு; 4 சிறுவர்கள் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மகாலட்சுமி நகர், காலி இடத்தில் பெட்ரோல் குண்டு வெடிக்க செய்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மது போதையில் சிறுவர்கள் இச்செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கர சத்தத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இச்சம்பவத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் உள்ளனரா என போலீசார் விசாரணை.
News January 26, 2026
மதுரை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி

மதுரை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க


