News September 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (07.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 8, 2025
மதுரை: மதுபான பாரில் 3 பேருக்கு கத்திக்குத்து

குருவிக்காரன் சாலையில் உள்ள தனியார் மதுபான பாரில் குடிபோதையில் இருந்த இரு தரப்பினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் மது பாட்டில், கத்தியால் குத்தியதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசை கண்டதும் பாரில் இருந்தவர்கள் வைகை ஆற்றுக்குள் குதித்து தப்பினர். அவர்களை போலீசார் விரட்டி 10 பேரை பிடித்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி.
News September 8, 2025
அர்ச்சகர் பள்ளியில் ஓதுவார் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் அறிக்கையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட அர்ச்சகர் ஓதுவார் பள்ளி பயிற்சிக்கு இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஓதுவார் பயிற்சிக்கு 14 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும் மாதந்தோறும் 10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மேலும் விபரங்களுக்கு திருக்கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 8, 2025
மதுரையில் மின்தடை செய்யப்படும் இடங்கள்

வண்டியூர், பிகேஎம் நகர், சௌராஸ்ட்ராபுரம், யாகப்பா நகர், சீமான் நகர், ஆனையூர், சொக்கலிங்கநகர், பெரியார் நகர், அசோக்நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, விளாங்குடி, கூடல்நகர், பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, வானொலி நிலையம், பாசிங்காபுரம், வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, மயானரோடு, வெற்றி தியேட்டர், வில்லாபுரம் TNHB புதுநகர் உசிலம்பட்டி ரோடு, & சந்தைப்பேட்டை பகுதிகளில் நாளை காலை 9 – மாலை 5 மணி வரை மின்தடை.*ஷேர்