News December 25, 2025
மதுரை மாவட்ட ஆட்சியர் பெயரில் முகநூலில் போலி கணக்கு!

மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெயரில் சமூக வலைதளமான முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் நண்பர் கோரிக்கைகள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போலி கணக்கிற்கு பொதுமக்கள் யாரும் பதிலளிக்கவோ, நண்பர் கோரிக்கையை ஏற்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற போலி கணக்குகளை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
Similar News
News February 2, 2026
மதுரை: டூவீலர்கள் மோதியதில் இளைஞர் பலி

உசிலம்பட்டி அருகே கல்லூத்தை சேர்ந்தவர் சிவபாண்டி(24). இவர் கரடிகல்லில் இருந்து கூத்தியார்குண்டு சாலையில் நேற்று டூவீலரில் சென்ற போது, எதிரே மற்றொரு டூவீலரில் வந்த சேடப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்(40) மோதினார். இதில் தலையில் அடிபட்டு சிவப்பாண்டி பலியானார். படுகாயத்துடன் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 2, 2026
சார்பதிவாளருக்கு எதிராக பாமகவினர் ஆர்ப்பாட்டம்

திருமங்கலம் செக்காரனூரணி சார்பதிவாளராக உமாதேவி உள்ளார். இவர் அங்கீகாரம் இல்லாத பத்திரப்பதிவுகளுக்கு சென்ட்க்கு ரூ.10,000 வீதம் பட்டா மாறுதல் இல்லாத பதிவுகளுக்கு சொத்து மதிப்புக்கு ஏற்ப ரூ.20000 முதல் ரூ.50000 லஞ்சம் பெறுவதாக கூறி அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாமகவினர் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News February 2, 2026
மதுரை: ரூ.12 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்

மதுரை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானம் கழக மதுரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், கோட்ட பொறியாளர் மனோகரன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஏழுமலை, உத்தபுரம், உசிலம்பட்டி, மேலூர், கருங்காலக்குடி, சோழவந்தான், விக்ரமங்கலம், செக்கானூரணி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, பாலமேடு பகுதியில் பலர் மின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு ரூ.12.25 லட்சம் அபராதம் விதித்தனர்.


