News December 19, 2025

மதுரை மாவட்டம் உட்பட 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு 44 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி பிரைம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் சரகத்திற்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்கள்: மதுரை தல்லாகுளம் அழகுமுத்து, திருநகர் சி. முருகேசன், மாநகர் மகளிர் வேதவல்லி, ஜெய்ஹிந்துபுரம் குற்றப்பிரிவு புவனேஸ்வரி அவனியாபுரம் குற்றப்பிரிவு தனலட்சுமி கிரேம் பிரான்ச் அன்னலட்சுமி மாற்றப்பட்டனர்.

Similar News

News January 31, 2026

மதுரை மக்களே ஒரு SMS எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

image

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News January 31, 2026

மதுரையில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த தம்பதியர்

image

மதுரை எச் எம் எஸ் காலனி அருணாச்சலேஸ்வரர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி.இவரது மனைவி இசக்கி நாச்சியார். தம்பதியர் இருவரும் மாதாந்திர ஏலச்சீட்டு மோசடி செய்ததாக மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு முதலீட்டாளர் நல சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 1.06 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது

News January 31, 2026

மதுரை: வேலை கிடைக்காததால் கொத்தனார் தற்கொலை

image

மதுரை ஜெய்ஹிந்த்பு­ரத்தை சேர்ந்­த­வர் முத்துக்குமார்(29). சென்­னையில் கொத்­த­னார் வேலை பார்த்து வந்த நிலை­யில் அங்கு நிரந்­த­ர­மாக வேலை கிடைக்­கா­மல் மதுரைக்கு திரும்பி வந்­தார். இங்கும் சரியாக வேலை கிடைக்­க­வில்லை. இதனால் மன வருத்­தத்தில் இருந்து வந்த முத்துக்குமார் இன்று
வீட்­டில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்பு­ரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!