News January 29, 2026

மதுரை மாவட்டம் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில், இன்று இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 6, 2026

கோரிப்பாளையம் பாலம் பிப்.20-ல் திறப்பா.?

image

மதுரை கோரிப்பாளையம் பாலத்தை பிப்.20 ல் முதல்வர் திறக்க ஏற்பாடு நடக்கிறது. இப்பால பணிகளை 2023 செப். 30ல் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமுக்கம் நெல்பேட்டை வரை 2.2 கி.மீ. செல்லுார் பாலம் 800 மீ என 3 கி.மீ கட்டுமான பணிகள் நடந்தன. அமெரிக்கன் கல்லூரி தொடர்ந்த வழக்கால் 6 மாதம் தொய்வு ஏற்பட்டது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன. அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடக்கிறது. பிப்.20ல் திறக்க வாய்ப்புள்ளது.

News February 6, 2026

மதுரை: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News February 6, 2026

மார்ச் 1-ம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி!

image

மதுரை மண்டேலா நகர் பகுதியில் வரும் 28-ம் தேதி நடைபெறவிருந்த பிரதமர் மோடியின் என்.டி.ஏ (NDA) கூட்டணிக் கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தற்போது மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களால் இந்தத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வருகை தேதி மாற்றப்பட்டுள்ளதால் அதற்கேற்பப் பாதுகாப்புப் பணிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!