News August 6, 2025
மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை

மதுரை மாவட்டத்தில் நாளை (ஆக.07) பெரும்பாலான பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. மேலவளவு, திருவாதவூர், அ.வல்லாளபட்டி, கண்ணனேந்தல், திருப்பாலை, மாகாளிபட்டி, வில்லாபுரம், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட துணை மின்நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இந்தத் தகவலை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. Share It.
Similar News
News December 17, 2025
மதுரையில் எலி மருந்து குடித்து தற்கொலை

மதுரை ஆண்டார்கொட்டாரத்தைச் சேர்ந்தவர் ராமக்கோடி (62). இவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததால் வீட்டார் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று எலி மருந்தை அருந்தியுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக G.H-ல் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமக்கொடி உயிரிழந்தார். இது குறித்து சிலைமான் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
News December 17, 2025
மதுரையில் சிக்கிய மாடு திருடும் கும்பல்!

மதுரை வண்டியூர் கோமதிபுரம் உள்ளிட்ட பகுதியில் மாடுகள் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் இருந்தது. இந்த கும்பலை மாட்டின் உரிமையாளரும், போலீசாரும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வண்டியூரில் ஒரு வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த கறவை மாடுகளை, 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் வாகனத்தில் ஏற்றி கடத்த முயன்றுள்ளனர். அப்போது அப்பகுதியினர் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
News December 17, 2025
மதுரையில் தொழில் நஷ்டத்தால் தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் சமீர் மால் (46) என்பவர் 7 ஆண்டுகளாக எலக்ட்ரிக் பொருட்கள் விற்கும் தொழில் செய்து வந்தார். அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, மதுரை G.H-க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


