News February 18, 2026
மதுரை மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் முழுவதும் மூடல்

மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியம், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினமே மதுபான கடைகளில் கூட்டம் குவிந்தது.
Similar News
News February 19, 2026
மதுரை: அமைச்சரின் ஆதரவாளருக்கு லுக்அவுட் நோட்டீஸ்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் உதவியாளராக இருந்த ஜெய்பாலாஜி, இவர் மனைவி கலாவதி ஆகியோர் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரனையில் மதுரையை சேர்ந்த அமைச்சரின் ஆதரவாளரான இலக்குவணன் என்பவருக்கும் இதில் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றதாக கூறப்படும் நிலையில் மதுரை ஏர்போட்டில் அவரை தேடி லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
News February 19, 2026
மதுரை மாநகர காவலர்கள் இரவு ரோந்து விபரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (18.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக தொடர்புக்கொண்டு தேவையான உதவியை பெறலாம்.