News February 15, 2025
மதுரை மாவட்டத்திற்கு புதிய நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நியமனம்!!!

மதுரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக இருந்த ரவிக்குமார் பணி மாறுதல் காரணமாக சென்ற காரணத்தால் மதுரை மாவட்ட முத்திரைத்தாள் தனி ஆட்சியர் முத்து முருகேசன் பாண்டியனை புதிய அலுவலராக நியமனம் செய்து தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் 28 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 21, 2025
தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் பலி!

மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் ஒருவர் மாரடைப்பால் பலியானார். தவெக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட பிரபாகரன் என்பவர் சக்கிமங்கலம் என்ற இடத்தில் சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News August 21, 2025
மதுரையில் விஜய் போட்டியா..?

மதுரையில் தவெகாவின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வௌியிட போகிறேன் என கூறிய விஜய், மதுரை கிழக்கு என ஆரம்பித்து மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவேன் என்று சொல்லி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக அறிவித்தார்.
News August 21, 2025
தரை விரிப்பை கூடாரமாக மாற்றிய த.வெ.க.,வினர்

மதுரை தவெக 2-வது மாநில மாநாடு நடை பெறும் பாரபத்தியில் மாநாட்டு திடலில் நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் காலை முதல் மாநாட்டு திடலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தொண்டர்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு தரை விரிப்புகளை கூடாரம் போன்று அமைந்து நிழல் தேடி வருகின்றனர்.