News February 4, 2026

மதுரை: மாடு முட்டியதில் வாலிபர் பலி

image

சிவகங்கை அருகே மேலசாளூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(39) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இவர் தைப்பூச திருவிழாவையொட்டி மேலூர் அருகே செம்மனிப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு காண தனது நண்பருடன் வந்தார். அப்போது மாடு முட்டியதில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 7, 2026

மதுரை அருகே 9ம் வகுப்பு மாணவி பலி

image

நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராமகண்ணன் மகள் விஜய்ஸ்ரீ(13), சிறுமலர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இச் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரால் கண்களை மூட முடியவில்லை. உடல் முழுவதும் சிராய்ப்பு மற்றும் நீல நிறமாக இருந்தது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 7, 2026

சோழவந்தான் அருகே லாரி மோதி முதியவர் பலி

image

சோழவந்தான் நகரி நெடுஞ்சாலையில் நேற்று மாலை சுமார் 55 வயது முதியவர் நடந்து சென்ற பொழுது அந்த வழியாகச் சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விஏஓ ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மோதிய வாகனம் கன்டெய்னர் லாரி என தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றி இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 7, 2026

மதுரை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

image

மதுரை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

error: Content is protected !!