News October 22, 2025
மதுரை: மழைநீர் வடிகால் பணியை பார்வையிட்ட ஆட்சியர்

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்குமார் அவர்கள் இன்று (21.10.2025)
மதுரை மாவட்டம், காமராசர் சாலைப் பகுதியில் மழை நீர் விரைவாக வெளியேற்றப்பட்டு வருவதையும், கீழவாசல் பகுதியில் பாலம் கட்டும் பணியையும் ஆய்வு செய்து பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் அவர்கள் உடன் உள்ளார்.
Similar News
News October 22, 2025
மதுரை: வெடி வைக்கும் போது ஏற்பட்ட விபரீதம்..சிறுவன் பலி

திருமங்கலம் உச்சபட்டியை சேர்ந்த ரவிக்குமார் மகன் ரிஷிதரன் 7 அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்தார். தீபாவளியையொட்டி நேற்று நண்பர்களோடு உச்சப்பட்டி மருதகாளி கோவிலில் அருகே வெடி வைத்துவிட்டு ஓடிய போது திறந்து கிடந்த தொட்டிக்குள் தவறி வந்த விழுந்த போது உள்ளே கிடந்த கண்ணாடி பாட்டில்கள் அவர் மீது குத்தியதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 22, 2025
மதுரை வைகை ஆற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

மதுரை ஓபுளா படித்துறை அருகேயுள்ள வைகையாற்றுக்குள் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற தெப்பக்குளம் போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இதுகுறித்து மதுரை மாநகராட்சி தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் முருகன் அளித்தப் புகாரின் பேரில், இறந்த நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனர்.
News October 21, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (21.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.