News January 13, 2026
மதுரை: மரத்தில் டூவீலர் மோதி விபத்து; ஒருவர் பரிதாப பலி..

மேலூர், நாவினிபட்டியை சேர்ந்தவர் நாராயணன்(53) உறங்கான்பட்டியில் வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். நேற்று முன்தினம், இரவு பணி முடிந்து டூவீலரில் தனியாமங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழையூர் பைபாஸ் அருகே உள்ள புளிய மரத்தில் டூ வீலர் மோதியது. ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 22, 2026
மதுரை: 17 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்

மதுரை கோ.புதூரை சேர்ந்த வேல்முருகன் மகன் பாரத் (20), 17 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் கோ.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற போது சிறுமி 5 மாத கர்ப்பம் என தெரிந்தது. மதுரை மேற்கு ஊர் நல அலுவலர் பாலஜோதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் பாரத்தை இன்று கைது செய்தனர்.
News January 22, 2026
மதுரையில் ஒர் நாள் வேலை நிறுத்தம்

தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி, பிப்.12 அன்று மதுரையில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதுகுறித்த அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று ஜன.22-இல் மதுரையில் நடந்தது. இச்சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என இக்கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
News January 22, 2026
மதுரை வழியாக புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை

திருவனந்தபுரம் முதல் தாம்பரம் இடையே அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் புதிதாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த, அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில் மதுரை வழியாக தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலில்11 பொது பெட்டிகள் உட்பட 21 பெட்டிகள் இடம் பெறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கிறார்.


