News October 25, 2025

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் மக்கள் சந்திப்பு

image

இன்று மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 61, சிட்டலாட்சி நகர், அன்சாரி நகர் 1,2,3 ஆகிய தெருக்களில் தெருவிளக்கு, கழிவு நீர் கால்வாய், உள்ளிட்ட பிரச்சனைகள், முதியோர், விதவை உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

Similar News

News October 26, 2025

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

image

மதுரை ஆனையூரை சேர்ந்தவர் திருமூர்த்தி(27). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவரது தாயார் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து போனார். அது முதல் மன உளைச்சலில் இருந்து வந்த திருமூர்த்தி இன்று தனது பாட்டி வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News October 25, 2025

மதுரை: அரசு பணிகளுக்கான ஆய்வு மேற்கொள்ளல்

image

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு பணிகளுக்கான ஆய்வு இன்று அக்.24, வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலர் அருண் தம்புராஜ் IAS வருகை புரிந்து ஆய்வினை மேற்கொண்டார். மேலும்
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கோ தளபதி MLA., மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் உயர்திரு சித்ரா IAS மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News October 25, 2025

‘ரத்தக் கையெழுத்து’ இயக்கத்தை தொடங்கிய ஆர்.பி.உதயகுமார்

image

இன்று மதுரை திருமங்கலத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ‘ரத்தக் கையெழுத்து’ இயக்கத்தை தொடங்கியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். இதில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!