News November 8, 2025
மதுரை: மணப்பெண் மின்சாரம் தாக்கி பலி

திண்டுக்கலை சேர்ந்த ரூபினிதேவி (25) வாடிப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் உடன்
2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியின் நகைகளை கணவர் வாங்கி செலவு செய்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட, திடீரென்று மின்சாரம் தாக்கி ரூபினிதேவி உயிரிழந்ததாக சொல்லபடுகிறது. இதை சந்தேக மரணமாக வாடிப்பட்டி போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை.
Similar News
News November 8, 2025
மதுரை: தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப முடிவு

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்தை சுற்றி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தெப்பத்தில் கழிவு நீர் கலக்காமல் இருக்கவும் மாநகராட்சி மூலம் தண்ணீர் நிரப்பவும் முடிவு செய்துள்ளதாக, மதுரை வைகை நதி மக்கள் இயக்கத்தை சேர்ந்த ராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு அறநிலையத் துறை பதில் அளித்துள்ளது.
News November 8, 2025
மதுரை அரசு மருத்துவமனை குப்பையால் பொதுமக்கள் அவதி

மதுரை அரசு மருத்துவமனையின் பின்பக்க வாசலில் மருத்துவக் கழிவுகள் அல்லாத வார்டுகளில் சேரும் உணவு பாக்கெட், குடிநீர் பாட்டில், பிற கழிவுகள் நாள்தோறும் 5 டன் அளவில் சேர்கிறது. இவற்றை உடனுக்குடன் அகற்றினால் தான் மருத்துவமனை வளாகம் சுத்தமாக இருக்கும். அருகிலேயே மார்ச்சுவரி உள்ளதால், அங்கு வருபவர்கள் குப்பையிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். விரைந்து நடவடிக்கை மக்கள் கோரிக்கை.
News November 8, 2025
மதுரை: EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <


