News December 28, 2025
மதுரை மக்களே இந்த எண்கள் ரொம்ப முக்கியம் SAVE IT..!

அவசர கால உதவி எண்கள்:
மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 29, 2025
மதுரை: பேச்சை மீறிய மனைவி: ஆசிட் குடித்து கணவர் தற்கொலை

மதுரை சிந்தாமணியை சேர்ந்த முருகானந்தம்(38) அப்பள கம்பெனி நடத்தி வருகிறார். இவர் மனைவி கோவிலுக்கு அழைத்து செல்லும்படி பலமுறை கூறியும், இவர் அழைத்து செல்லாததால் தன் தந்தையுடன் கோவிலுக்கு சென்றார். தன் பேச்சை மனைவி மீறியதால் மனமுடைந்த கணவர்
ஆசிட்டை குடித்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு நேற்று உயிரிழந்தார். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 29, 2025
மதுரை: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
A – 26 என்றால் மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News December 29, 2025
மதுரையில் ஜோதிடருக்கு பீர் பாட்டிலால் குத்து

மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் ஜோதிடர் மணிகண்டன்(35). அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் விளையாடிய போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட பிரபு(24) பீர் பாட்டிலுடன் அவர் வீட்டிற்கு சென்று பாட்டிலை உடைத்து சரமாரியாக அவரை குத்தினார். திருப்பாலை போலீசார் மணிகண்ட பிரபுவை இன்று கைது செய்தனர்.


