News June 10, 2024
மதுரை மக்களுக்கு நன்றி அறிவிப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் செயலா் கணேசன், புறநகா் மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் “மதுரை மக்களவைத் தொகுதியில், இந்தியா கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசனை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும்
வெற்றி பெற வைத்த மதுரை மக்களுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றியை தெரிவிக்கிறது” என்று தெரிவித்துள்ளனா்.
Similar News
News September 10, 2025
மதுரை: மேலூர், திருமங்கலம் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

மதுரை மேலூர், திருமங்கலம் ஒருபோக சாகுபடிக்கு செப்டம்பர் 18ம் தேதி வைகையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலூரில் 85 ஆயிரம் ஏக்கருக்குதினமும் 900 கன அடியும், திருமங்கலத்தில் 19,500 ஏக்கருக்கு 230 கன அடி வீதம் மொத்தம் 1130 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். *ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
சோழவந்தான் வைகை ஆற்றில் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் போஸ் (78). இவர் ஆட்டோவில் சோழவந்தான் வந்து கொண்டிருந்தார். அப்போது வாந்தி எடுத்ததால் ஆடைகளை கழுவ சோழவந்தான் வைகை ஆற்றில் இறங்கிய முதியவர் போஸ் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நேற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அவரது சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இச்சம்பம் தொடர்பாக சோழவந்தான் போலீசார் விசாரித்து விடுகின்றனர்.
News September 10, 2025
மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள்

மதுரையில் இருந்து பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், வழக்கமாக 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரு எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டியும் இருக்கும். இந்நிலையில், நாளை (வியாழக்கிழமை) முதல் 14 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.