News March 29, 2025

மதுரை மக்களுக்கு சூப்பர் ஆபர் – ஆட்சியர் அறிவிப்பு

image

மதுரையில் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,”தமிழ்நாடு அரசின் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் ரம்ஜானை முன்னிட்டு 31.03.2025 வரை பொதுமக்கள் வாங்கும் புத்தாடைகளுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படும். 3 ஆடைகளுக்கு மேல் வாங்குவோருக்கு 33% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.2 நாட்கள் மட்டுமே உள்ளதால் வாய்ப்பை தவறவிடாதீர்கள்

Similar News

News April 1, 2025

திருப்பரங்குன்றத்திற்கு பக்தர்கள் செல்ல தடை

image

திருப்பரங்குன்றத்தில் ஏப்ரல் 14ல் திருக்குட நன்னீராட்டு விழா நடக்க உள்ள நிலையில், ஏப்ரல்
7 ஆம் தேதி முதல் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், கோவிலில் ஏப்ரல் 7 ஆம் தேதி பாலாலய யாகசாலை பூஜை தொடங்கி குடமுழுக்கு பணியும் , கோயிலின் மூலஸ்தானம் அர்த்தமண்டபம் மகா மண்டபத்தில் மராமத்து பணி நடக்க உள்ளது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News April 1, 2025

மதுரையில் வேலை வாய்ப்பு

image

மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் PGT, TGT, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட 06 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு
B.Ed, BA, M.Com, M.Sc, MA, MBA படித்த 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் <>இந்த<<>> தளத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.21250 -27,500 வரை ஊதியம் கிடைக்கும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News April 1, 2025

மதுரையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!